இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், அதானி கீரின் எனர்ஜி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 1,39,357.52 கோடி ரூபாய் அதிகரித்து, 18,66,071.57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2,758.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அதானி கீரின் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையானது 3698.89 கோடி ரூபாய் அதிகரித்து, 4,51,749.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே அதானி கீரின் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.54% அதிகரித்து, 2,882.80... விரிவாக படிக்க >>