மருத்துவ பட்டப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம்! இன்று முதல் தொடக்கம்!
மருத்துவ பட்டப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம்! இன்று முதல் தொடக்கம்! 2022-ம் ஆண்டு மருத்துவ பட்டப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, நீட் (NEET) ஜூலை 17, 2022 அன்று நடைபெறும். அதற்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. NEET UG 2022 தேர்வைப் பற்றிய கூடுதல் தகவல்கள், தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளமான neet.nta.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 6-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நீட் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை மே 7, இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை.