மது வாங்கித் தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவனை கடத்தி சரமாரியாக தாக்கிய கும்பல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாய்குமார் (20). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாய்குமார், தனது 3 நண்பர்களுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இவர்கள் அருகில் 4 பேர் வந்து மது அருந்த வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் சாய்குமாரிடம் மது வாங்கி தருமாறு மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் சக மாணவர்களுக்கு கைப்பேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார். பின்னர், மதுப்பான கடைக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா (19) என்பவர் இரு மாணவர்களுடன் வந்துள்ளார். அப்போது மது வாங்கி தர கேட்ட கும்பல் சூர்யாவை பிடித்து கொண்டு மது வாங்கி தந்தால் தான் உன்னை விடுவேன் எனக் கூறி அவரை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் நடுவில் அமரவைத்து கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த கும்பல் சூர்ய...