வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !!
வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !! கேஜிஎஃப் சாப்டர் 1 ல் வில்லனாக காட்டப்பட்ட கருடனை, ராக்கி கொலை செய்து கேஜிஎஃப்பை கைப்பற்றுவதுடன் முடிக்கப்பட்டது. ராக்கி, கருடனை கொலை செய்த பிறகு என்ன நடந்தது, தனது தாயின் கனவை ராக்கி எப்படி நிறைவேற்றினார். ஒரு தாயின் கனவின் வலிமை பற்றி காட்டி உள்ளனர். கேஜிஎஃப்பை முழுவதுமாக கைப்பற்றி, தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த ராக்கி கொல்லப்படுவதாக கேஜிஎஃப் சாப்டர் 2 முடிக்கப்படுகிறது. இருந்தாலும் கேஜிஎஃப் 3 உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளனர். மிக அதிக தொகைகளை வசூலித்த இந்திய படங்களில் கேஜிஎஃப் 2 தற்போது 7 வது இடத்தில் உள்ளது. இந்தியில் வெறும் 7 நாட்களில் 200 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 13வது இடத்தில் உள்ளது. ரிலீசான 7 நாட்களில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை விட உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. முதல் 7 நாட்களில் 715 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. வெகு விரைவில் 1000 கோடி கிளப்பில் கேஜிஎஃப் 2 இணைய உள்ளது. நேற்று மட்டும் இந்தியில் 15 முதல் 16 கோடிகளை வசூல் செய்துள...