தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம் - நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்! இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி, திருடனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ.. தெரு நாய்களுக்கு கட்டாயம் பயப்படுகின்றனர். பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துவது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து செல்ல நினைப்பவர்களும் நாய்க்கு பயந்து வாகனத்தில் செல்கின்றனர். வாகனத்தை நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர்.. அந்த அளவுக்கு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் தான் இந்த நிலை என்றாலும் கேரளாவிலும் தெருநாய்களின் தொல்லை இப்படித்தான் உள்ளது. கேரளா முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்த உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்....