வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !!


வெறும் 7 நாளில் 715 கோடி வசூல்... வேற லெவலில் மிரட்டும் கேஜிஎஃப் 2 !!


கேஜிஎஃப் சாப்டர் 1 ல் வில்லனாக காட்டப்பட்ட கருடனை, ராக்கி கொலை செய்து கேஜிஎஃப்பை கைப்பற்றுவதுடன் முடிக்கப்பட்டது. ராக்கி, கருடனை கொலை செய்த பிறகு என்ன நடந்தது, தனது தாயின் கனவை ராக்கி எப்படி நிறைவேற்றினார். ஒரு தாயின் கனவின் வலிமை பற்றி காட்டி உள்ளனர். கேஜிஎஃப்பை முழுவதுமாக கைப்பற்றி, தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த ராக்கி கொல்லப்படுவதாக கேஜிஎஃப் சாப்டர் 2 முடிக்கப்படுகிறது. இருந்தாலும் கேஜிஎஃப் 3 உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளனர்.

மிக அதிக தொகைகளை வசூலித்த இந்திய படங்களில் கேஜிஎஃப் 2 தற்போது 7 வது இடத்தில் உள்ளது. இந்தியில் வெறும் 7 நாட்களில் 200 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் கேஜிஎஃப் 13வது இடத்தில் உள்ளது. ரிலீசான 7 நாட்களில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை விட உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளது. முதல் 7 நாட்களில் 715 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. வெகு விரைவில் 1000 கோடி கிளப்பில் கேஜிஎஃப் 2 இணைய உள்ளது.

நேற்று மட்டும் இந்தியில் 15 முதல் 16 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 40 முதல் 45 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. இதுவரை மொத்தமாக இந்தியில் 253.7 முதல் 254.7 கோடிகளையும், உலகம் முழுவதும் 716 முதல் 721 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. முதல் 6 நாட்களில் இந்தியா முழுவதும் 566 கோடிகளை கேஜிஎஃப் 2 வசூல் செய்துள்ளது. ரிலீசான முதல் 7 நாட்களில் ஆர்ஆர்ஆர் 710 கோடிகளையும், பாகுபலி 2 படம் 830 கோடிகளையும் வசூல் செய்தது.

உலகம் முழுவதும் 10,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்ட கேஜிஎஃப் 2 ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே உலகம் முழுவதும் 345 கோடிகளை வசூல் செய்து விட்டது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது.

Comments

Popular posts from this blog