முதல்வரை சந்தித்த தளபதி விஜய்!
முதல்வரை சந்தித்த தளபதி விஜய்!
தளபதி விஜய் சற்றுமுன் முதல்வரை சந்தித்த நிலையில் பொன்னாடை போர்த்தி முதல்வர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தற்போது ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தளபதி விஜய் சற்றுமுன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்து உள்ளார், இந்த சந்திப்பின்போது விஜய் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதேபோல் முதல்வரும் விஜய்க்கு பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதோடு நினைவுப்பரிசும் வழங்கினார்.
இந்த சந்திப்பு குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமிர்த்த சந்திப்பு என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் விஜய்யை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment