ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்!


ஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்!


தங்கள் எதிர்கால திட்டங்களுக்காக ஊழியர்கள் வேலை மாறுவது என்பது இயல்பாக நடக்கும் ஒன்று. ஆனால் திறமையான ஊழியர்களை சரியாக கண்டறிந்து வேலை கொடுப்பதோடு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி ஊழியர்களை தக்க வைத்து கொள்வதற்கான உத்திகளை செயல்படுத்துவதில் பல நிறுவனங்கள் அதிக முயற்சி எடுக்கின்றன.

சரியான வேலை-வாழ்க்கை சமநிலையை ஊழியர்கள் அடைய ஹோம் பாலிசிகள் முதல் பெய்டு மென்டல்-ஹெல்த் லீவ்ஸ் வரை பல விருப்பங்களை வழங்குகின்றன. இந்நிலையில் ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு வித்தியாசமான ஆஃபர் ஒன்றை வழங்குகிறது. அந்த ஆஃபர் என்னவென்றால் "free matchmaking service" தான். அதாவது திருமணமாகாத ஊழியர்களுக்காக இலவசமாக வரன் பார்த்து தரும் சேவையை வழங்குகிறது. என்ன கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா.! திருமணமாகாத ஊழியர்களின் நலன் கருதி இந்த இலவச சேவையை வழங்கும் கம்பெனி வேறு எங்கும் இல்லை நம்ம மதுரையில் தான்..

இந்த ஒரு தகவலுக்கே நீங்கள் ஆச்சரியப்பட்டால் எப்படி.? நிறுவனம் வழங்கும் "free matchmaking service"-ஐ பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு போனஸ் பரிசு காத்திருக்கிறது. சம்பள உயர்வு என்பது தான் அது..

ஆம் கல்யாணத்திற்கு வரனும் பார்த்து கொடுத்து, அந்த வரனையே நல்லபடியாக திருமணம் கொண்டால் வாங்கி கொண்டிருக்கும் சம்பளத்தை உயர்த்தியும் கொடுக்கிறது " sri mookambika infosolutions"என்ற மதுரையை சேர்ந்த IT நிறுவனம். கேட்பதற்கே மிகவும் அருமையாக இருக்கிறதல்லவா.! பலருக்கும் வினோதமாக தோன்றும் இந்த முயற்சியை பற்றி பேசி உள்ள Mookambika Infosolution-ன் நிறுவனர் செல்வகணேஷ், எங்களது ஊழியர்களில் பெரும்பாலானோர் கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வயதான பெற்றோர்களை கொண்டிருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு சரியான உலகக் கண்ணோட்டம் இல்லை.

Also Read : 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த நபர்..

இதனால் தங்களுக்கு தகுந்தாற் போல சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எனவே தான் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முன்மாதிரி திட்டத்தை கையில் எடுத்தோம் என்றார். மதுரையை சேர்ந்த இந்த ஐடி நிறுவனம் முதலில் துவக்கப்பட்டது 2006-ஆம் ஆண்டு சிவகாசியில் தான். சில ஆண்டுகளுக்கு பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டது. தற்போது 750-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.

Also Read : ‘காத்து வாக்குல மூன்று காதல்’.. திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்..

இதில் 40சதவீத ஊழியர்கள் இதே நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருபவர்கள். இந்த நீண்ட கால ஊழியர்களை பற்றி குறிப்பிட்ட செல்வகணேஷ், இவர்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை அப்படியே விட்டு விட முடியாது. வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும் முன்பே நாங்கள் அவர்களுக்கு உரியதை வழங்குகிறோம் என்று கூறி உள்ளார். ஊழியர்களுடன் நல்ல பிணைப்பை உருவாக்க நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்ய வேண்டும், எல்லாவற்றையும் வணிக கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்று கூறுகிறார் ஊழியர்களுக்கு மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் செல்வகணேஷ்.

Comments

Popular posts from this blog