உஷார்!! தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!


உஷார்!! தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!


இளநீர், நுங்கு என்று தாகம் தணிக்கிற பழங்களின் விற்பனையும் பரவலாக காணப்படுகிறது. சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் ஒரு எலுமிச்சைப்பழம் 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இப்படி வெயிலின் தாக்கத்தை தணிக்க ஒரு புறம்  மக்கள் தவித்து வந்தாலும், தமிழகத்தின் இன்னொரு பக்கம் தொடர்ந்து 1 வார காலமாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளில் மாலை நேரங்களில் இதமான சாரல் மழையும், பகல் வேளைகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,  தமிழகத்துக்கு அடுத்த இரு தினங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆரஞ்சு அலர்ட் அறிவித்து, சென்னை வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. 

 

தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும்  என அடுத்த இரு தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் போன்ற டெல்டா  மாவட்டங்களிலும்,  புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog